விபத்து மற்றும் அவசர சிகிச்சை


மணிப்பால் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் துறை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் முதல் வெட்டுக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவு வரை அனைத்தையும் ஒரே கவனத்துடன் பராமரிக்கின்றது. 24 x 7 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சைப்பிரிவு, அனைத்து வகையான மருத்துவ அவசர சிகிச்சைகளையும் கைக்குழந்தைகள், குழந்தைகள், இளம் பருவத்தினர், மற்றும் பெரியவர்களுக்கு வழங்குகிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையின் அவசர சிகிச்சைத் துறையில்  பல்துறை சார்ந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சையில் பயிற்சி பெற்ற செவிலியர்கள், மற்றும் 24 மணி நேரமும் பணிபுரியும் நிபுணர்கள் அடங்கிய குழு உள்ளது. நோயாளிகள் அனுமதிக்கப்பட்டவுடன், செவிலியர்கள் அவர்களைப் பரிசோதித்து, நோயாளியின் நிலையின் தீவிரத்தைப் பொறுத்து அவர்களை ஒரு தகுந்த இடத்தில் சேர்க்கின்றனர். மாரடைப்பு, பக்கவாதம், மற்றும் பெரிய விபத்து போன்ற உயிருக்கு ஆபத்தான மற்றும் டைம் கிரிட்டிக்கல் நிலைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக ரெசஸ்சியேஷன் பே என அழைக்கப்படும் தனி பராமரிப்புப் பகுதியில் வைத்து ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் நேரடியாகக் கால தாமதம் ஆகாமல் இந்த பே -யில் மாற்றப் படுகின்றனர். அங்கே மருத்துவர்களும் செவிலியர்களும் உடனடியாக மதிப்பீடு செய்து நோயாளிகளை நிலையை ஸ்திரப்படுத்துவதற்காக சிகிச்சை அளிக்கின்றனர். அதி நவீன நோயறிதல் உபகரணங்களைப் பயன்படுத்தி, மணிப்பால் மருத்துவமனையில் உடல் உட்காயங்களைக் கண்டறிய விரைவாக ஸ்கேன் செய்து  சிறந்த பராமரிப்பு மற்றும் மீட்புக்கான சரியான சிகிச்சை முறையைத் தொடங்குகின்றனர்.

Treatment & Procedures

டிரோக்கியோஸ்டோமி

சில சமயங்களில், ஒரு நோயாளியின் மூச்சுப்பாதைகள் அடை பட்டால், கழுத்தில் இடப்படும் ஒரு துல்லியமான கீறல் மூலம் நோயாளியின்மூச்சுக்குழாய்க்கு வெண்டிலேட்டரில் இருந்து நேரடியாக ஒரு குழாயைக் கொண்டுசெல்ல அவசர டிரோக்கியோஸ்டோமி செய்யப்படுகிறது. மற்ற கண்டறிதல் அணுகுமுறைகள் மற்றும் சிகிச்சைகள் பரிசீலனையில் இருக்கும்போது இந்தச் செயல்முறை நோயாளியை சுவாசிக்க அனுமதிக்கிறது.மணிப்பால்…

Read More

பெரியவர்களுக்கு மேம்பட்ட அவசர…

அவசரகால மருத்துவ நடைமுறையில் காற்றுப்பாதையை நிர்வகிப்பது முக்கியமானதாகும். கடுமையாகக் காயப்பட்ட அல்லது உடல்நலக் குறைவான நோயாளிகளைப் பராமரிப்பதற்கு இது ஓர் அத்தியாவசிய செயல்திறன் ஆகும். ஆர்எஸ்ஐ அல்லது ரேப்பிட் சீக்வென்ஸ் இன்டுபேஷன் என்பது மூச்சுக்குழலுக்குள் குழாயை உட்செலுத்துவதாகும். இது காற்றுப்பாதை மேலாண்மைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.

Read More

செயலிழந்த நுரையீரலை ரியின்ஃபிளேஷன்…

நோயாளிகளுக்கு செயலிழந்த நுரையீரல், வலியையும் துயரத்தையும் கடுமையான ஆபத்தையும் ஏற்படுத்தலாம். நீடில் ஆஸ்பிரேஷன் என்னும் விரைவான மற்றும் பயனுள்ள அவசர செயல்முறையானது மருத்துவர் நெஞ்சுக் குழியிலிருந்து காற்றை அகற்றுவதற்காகவும், செயலிழந்த நுரையீரலில் இருக்கும் அழுத்தத்தைக் குறைத்து சாதாரணமாகச் செயல்படவும் அனுமதிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் ப்ளூரல் ஸ்பேசில்…

Read More

டிரக்கியோஸ்டமி

காற்றுப்பாதை குறுகுவதால் நோயாளிகள் சுவாசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, டிரக்கியோஸ்டமி என்னும் அவசரகால சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தொண்டையில் இடப்படும் ஒரு துளை ஒரு வென்டிலேட்டரோடு இணைக்கப்பட்டு நோயாளிகளை நேரடியாக தொண்டையிலிருந்து சுவாசிக்க உதவுகிறது. இது ஒரு முக்கிய உயிர்காக்கும் சிகிச்சையாகும். இது நோயாளிகளின் மூச்சுத் திணறலைத் தடுக்கிறது.

Read More

டிரோக்கியோஸ்டோமி

சில சமயங்களில், ஒரு நோயாளியின் மூச்சுப்பாதைகள் அடை பட்டால், கழுத்தில் இடப்படும் ஒரு துல்லியமான கீறல் மூலம் நோயாளியின் மூச்சுக்குழாய்க்கு வெண்டிலேட்டரில் இருந்து நேரடியாக ஒரு குழாயைக் கொண்டுசெல்ல அவசர டிரோக்கியோஸ்டோமி செய்யப்படுகிறது. மற்ற கண்டறிதல் அணுகுமுறைகள் மற்றும் சிகிச்சைகள் பரிசீலனையில் இருக்கும்போது இந்தச் செயல்முறை நோயாளியை சுவாசிக்க அனுமதிக்கிறது.

Read More

மணிப்பால் மருத்துவமனையின் பிரத்தியேக ஆம்புலன்ஸான மணிப்பால் ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் செர்விஸ் (மார்ஸ்), சிறந்த 360 டிகிரி மருத்துவனைக்கு முந்திய பராமரிப்பை முக்கியமான அவசர நிலைகளில் பொன்னான நேரத்தின் போது வழங்குகிறது. மணிப்பால் மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸுகள் உள்ளன. அதாவது 30க்கும் அதிகமான அதி நவீன ஆம்புலன்ஸுகளை நாடு முழுவதும் கொண்டுள்ளது. நோயாளிகளின் நிலைகளை அதி நவீன உயிர் காக்கும் கருவியை கொண்டு ஏசிஎல்எஸ் (அட்வான்ஸ்டு கார்டியாக் லைஃப் சப்போர்ட் ) பயிற்சி பெற்ற மருத்துவருக்கு நேரடியாக அளிக்கிறது. ஆம்புலன்ஸ்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் உள்ள அவசர சிகிக்சை வசதிகளுக்கு எடுத்துச்செல்கின்றன. ஓர் அவசர நிலையில் கோல்டன் ஹவரில் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயப்பட்டவர்களை நிலைபடுத்துவதின் முக்கிய பங்கை மணிப்பால் மருத்துவமனைகள் புரிந்துகொள்கிறது. இவ்வாறு உயிர்களைக் காப்பதில் அதிகபட்ச நேர்மறையான பலனை உருவாக்கி, நோயாளிகள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் முகங்களில் புன்னகையை மீண்டும் ஏற்படுத்துகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனையில்,  ஏறக்குறைய அனைத்து அவசர சிகிச்சைகளையும் பூர்த்தி செய்யும் திறன்பெற்றதாக இஆர் உள்ளது. வழங்கப்படும் சில சிகிச்சைகள் - பெரியவர்களுக்கு மேம்பட்ட அவசரகால காற்றுப்பாதை மேலாண்மை - பெரியவர்களுக்கு அடிப்படை காற்றுப்பாதை மேலாண்மை - கேப்னோகிராபி - இஆர் -இல் மெக்கானிக்கல் வெண்டிலேஷன்- இஆர் -இல் ஊடுருவல் அற்ற வெண்டிலேஷன் - பெரியவர்களுக்கு ரேப்பிட் சீக்வென்ஸ் இன்ட்யூபேஷன் - டிரக்கியல் இன்டுபேஷன் மற்றும் ஆர்எஸ்ஐ- பெரியவர்களுக்கு மேம்பட்ட கார்டியாக் லைஃப் சப்போர்ட் (ஏசிஎல்எஸ்) பெரியவர்களுக்கு பேசிக் லைஃப் சப்போர்ட் (பிஎல்எஸ்) - அவசர அறுவை சிகிச்சை கிரிகோதைரோடோமி (கிரிகோதைராய்டோடோமி) –இன்ஃபில்டிரெஷன் ஆஃப் லோகல் அனெஸ்தெடிக்ஸ் –பெரியவர்களுக்கு ப்ரொஸீஜரல் செடெஷன் -ஆர்டிரியல் ப்ளட் கேஸஸ்- எமர்ஜென்சி பெரிகார்டியொசெண்டெஸிஸ்- செண்ட்ரல் வினஸ் அக்ஸஸ்- பெரிபெரல் வினஸ் அக்ஸஸ்-சிறிய தோல் காயங்களை ஸ்டேப்பிள்ஸ் மூலம் மூடுதல் - தோல் காயங்களைத் தையல் மூலம் மூடுதல் - சிறிய காயங்களை திசு பசைகள் (சயனோஅக்ரிலேட்ஸ்) மூலம் சரிசெய்தல் - தோல் புண்களுக்கான கீறல் மற்றும் வடித்தல் - ஸ்கேல்ப் சிதைவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் நிர்வகித்தல் - சிறிய தோல் காயங்களை மூடுதல் ஸ்டேபிள்ஸ்-ரிடக்‌ஷன் ஆஃப் டெம்பொரொமாண்டிபுலர் ஜாய்ண்ட்(டிஎம்ஜெ) டிஸ்லொகேஷன் – தோள் டிஸ்லொகெஷன் மற்றும் ரிடக்‌ஷன் –ஸ்பிலிண்டிங் ஆஃப் மஸ்குலோஸ்கெலிட்டல் இஞ்சுரிகள்-லும்பார் பங்சர்- ஆன்டிபார்ட்டம் ஃபீட்டல் ஹார்ட் ரேட் அசெஸ்மெண்ட்-டயக்னாஸ்டிக் தோராசென்டெஸிஸ்-பிளேஸ்மெண்ட் மற்றும் தோரோகாஸ்டொமி ட்யூப்களின் மேலாண்மை

FAQ's

Remember the three Ps Preserve life: stop the person from dying.

Prevent further injury: stop the person from being further injured.

Promote recovery: try to help the person heal. After following the above procedure, one should reach out for professional assistance immediately. Visit our emergency care hospital in Bangalore today.

Treating a patient with a medical emergency is different from treating a stable patient, every minute is crucial in a medical emergency. Stabilization, pain management, and immediate treatment without unnecessary delays are key.

The different type of emergencies are:

  • Trauma Emergencies

  • Cardiac Emergencies

  • Stroke Emergencies

  • Pediatric Emergencies

Visit Manipal Hospitals, the accident care hospital in Bangalore to have the best treatment.

மருத்துவ உதவி மற்றும் அவசர கால உடனடி ஆதரவு கிடைப்பதற்கு மணிப்பால் மருத்துவமனை செயலியைப் (ஆப்) பதிவிறக்கம் செய்து ரெஜிஸ்டர் செய்யவும்.

Explore Stories

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்