எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் உட்பட முழுமையான தசை எலும்பு அமைப்பின் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளைக் கொண்டு மணிப்பால் மருத்துவமனைகளின் எலும்பியல் துறை ஓர் இணையற்ற மதிப்பீட்டையும் உங்களை நகரவைக்கவும் செயல்படும்படியாக வைக்கவும் தேவையான அனைத்தும் அடங்கிய சிகிச்சையையும் வழங்குகிறது.

எலும்பியல் (ஆர்தோபெடிக்ஸ்)

கண்டறியும் இமேஜிங்கில் இருந்து, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை, ஆதரவு மற்றும் வாழ்நாள் முழுவதும் பின்நடவடிக்கைப் பராமரிப்பு வரை மணிப்பால் மருத்துவமனைகளின் புற்றுநோயியல் துறை ஏறத்தாழ ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் ஒரு மேம்பட்ட அளவிலான பராமரிப்பை வழங்குகிறது. மொத்தத்தில், ஒரு பரந்துபட்ட புற்றுநோய் பராமரிப்பு மையம்.

கேன்சர் கேர்

எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் உட்பட முழுமையான தசை எலும்பு அமைப்பின் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளைக் கொண்டு மணிப்பால் மருத்துவமனைகளின் எலும்பியல் துறை ஒரு இணையற்ற மதிப்பீட்டையும் உங்களை நகரவைக்கவும் செயல்படும்படியாக வைக்கவும் தேவையான அனைத்தும் அடங்கிய சிகிச்சையையும் வழங்குகிறது.

எலும்பியல்

மனித பராமரிப்பு நிபுணர்கள்

எங்கள் தோற்றத்தின் விதைகள் 1953 ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டன. மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுவின் (எம்இஎம்ஜி) நிறுவனர் டாக்டர் டி.எம்.ஏ. பை, கர்நாடகாவின் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியை நிறுவினார். பெங்களூரின் பழைய விமான நிலைய சாலையில் எங்கள் 650 படுக்கைகள் கொண்ட முதன்மை மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் 1991 ஆம் ஆண்டில் மணிப்பால் மருத்துவமனைகள் ஒரு நிறுவனமாக உருவாகியது. இன்று நாங்கள், 27 மருத்துவமனைகளில் 7600 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்டு இந்தியாவின் முன்னணி சுகாதாரக் குழுக்களில் ஒன்றாக விளங்குகிறோம். மேலும் மலேசியாவில் உள்ள எங்கள் மருத்துவமனை மூலம் சர்வதேச அளவிலும் செயல்பட்டு வருகிறோம்.

நோயாளியே முதன்மை என்ற சிந்தனையைச் சுற்றியே எங்கள் முக்கிய மதிப்புகள் கட்டப்பட்டுள்ளன. மணிப்பால் மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மனிதப் பராமரிப்பு நிபுணர் ஆவார். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயலாற்றும்போது கடமைக்கான அழைப்புக்கு மேலும் அதற்கு அப்பாலும் செல்கிறார்கள். அவர்கள் இந்த பயணங்களைத் தொடங்கும்போது, ​உறுதி, மனத்திண்மை மற்றும் ஒருபோதும் பின்வாங்கிப் போகாததைப் பற்றிய வரலாறுகள் வெளிப்படுகின்றன. 'வழக்கமாக வாழ்க்கை' குறித்த உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும் வரலாற்றைக் கண்டறிய ஒரு பயணத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்

0+

ஆண்டுகால அனுபவம்

0+

வாழ்க்கைகள் தொடப்பட்டுள்ளன

0+

மருத்துவ நிபுணர்கள்

Jayanagar_1.jpg

வாழ்க்கை ஒரு பார்வையில்

ஆரோக்கியத்தின் புகலிடம்

சமீபத்திய புதுப்பிப்புகள்

எங்களைப் பற்றி

பெங்களூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனை, ஜெயநகரில் இருக்கும் சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகும். இது ஒரே இடத்தில் பல சிறப்பு நோயாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2008 இல் நிறுவப்பட்டது. நாம் “வாழ்க்கையால் எழுச்சியூட்டப்பட்டவர்கள்” என்பதை எங்கள் செயல்கள் பிரதிபலிப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். நோயாளியை மையமாகக் கொள்ளுதல், சிறந்த மருத்துவம் மற்றும் நெறிமுறையான நடைமுறைகள் ஆகிய முக்கிய மதிப்புகளை முன்னிறுத்தி ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனை பணியாற்றுகிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவமும், 80 படுக்கைகள் கொண்ட உள்நோயாளி வசதியையும் கொண்ட ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனை ஜெயநகரில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். மேலும் உள் மருத்துவம், இருதயவியல், எலும்பியல், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறை, குழந்தை மருத்துவத்துடன் சிறப்பு மருத்துவம் மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது. நியோனாட்டாலஜி & என்ஐசியு பராமரிப்பு, பொது அறுவை சிகிச்சை, நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல், நுரையீரல், சிறுநீரகம், சிறுநீரக அறிவியல், தோல் நோய், ஈஎன்டி, பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு, இரைப்பைக்குடல் சிகிச்சை, நரம்பியல், வாதவியல், அவசர மருத்துவம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு துறை ஆகியவை நோயாளிக்கு சிறந்த பராமரிப்பை வழங்குகின்றன. மணிப்பால் மருத்துவமனை ஜெயநகரில் தகுதிவாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் தரமான நோயாளி பராமரிப்பை அன்பு மற்றும் அரவணைப்புடன் வழங்க உறுதிபூண்டுள்ளனர்.

மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளையும் பராமரிக்கக்கூடிய சிறந்த ஐசியுக்களில் ஒன்றை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவ ஐசியூ, பிறந்த குழந்தை ஐசியூ மற்றும் இருதயப் பராமரிப்பு பிரிவு ஆகியவை உள்ளன. ஐசியூ மற்றும் அவசர நிலைப் பிரிவில் உள்ள மருத்துவர்கள் அவசர நிலைப் பராமரிப்பில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் மற்றும் மருத்துவமனையில் 24 X 7 தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் மற்றும் பாசிட்டிவ் நர்சிங் குழுவினர் எந்தவொரு தீவிர சிகிச்சை தேவையின் போதும் சாத்தியமாகும் துரித நேரத்தில் செயல்படும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.

ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனை புதிதாக ஒரு இண்டர்வென்ஷனல் இருதயப் பராமரிப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனையின் இருதயவியல் துறை தெற்கு பெங்களூரில் மிகச் சிறந்த மற்றும் விரிவான இதயப் பராமரிப்பு வசதிகளில் ஒன்றாகும். இதில் சிறந்த இதய நிபுணர்கள் மற்றும் நர்சிங் குழு 24 x 7 அவசர இருதய சேவைகளையும் வழங்குகிறது. இதயத் தமனி நோய், இதயக் குழல் ஆஞ்சியோகிராம், இதயக் குழல் ஆஞ்சியோபிளாஸ்டி, அவசரகால பெர்குடனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (பிசிஐ), ஐசிடி இம்பிளாண்டேஷன், மற்றும் இதய ரிதக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.

மூட்டு மாற்று, தோள்பட்டை மற்றும் விளையாட்டுக் காயம், முதுகெலும்பு பராமரிப்பு மையம் ஆகியவற்றுக்கான மணிப்பால் மருத்துவமனையின் எலும்பியல் மையம், அனைத்து வகையான எலும்புகள், மூட்டு மற்றும் முதுகெலும்புக் கோளாறுகளுக்கும் மிகவும் நாடப்படும் சிகிச்சை வசதிகளைக் கொண்டுள்ளது. கடுமையான மற்றும் நாள்பட்ட வலி, காயம் மற்றும் விபத்து அறுவை சிகிச்சை, விளையாட்டு மருத்துவம், ஆர்த்ரோஸ்கோபி, மூட்டு மாற்று (டிகேஆர் / டிஎச்ஆர்), கை அறுவை சிகிச்சை, மணிக்கட்டு அறுவை சிகிச்சை, மற்றும் கால் மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு ஜெயநகர் மணிப்பால் மருத்துவ மனையின் எலும்பியல் துறை பல்துறை சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது.

ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனைகள் தலைசிறந்த ஆபரேஷன் தியேட்டரைக் கொண்டுள்ளது மற்றும் பெங்களூரில் மூட்டு மாற்று (டிகேஆர் / டிஎச்ஆர்), தோள்பட்டை ஆர்த்ரோஸ்கோபி, ரோட்டேட்டர் சுற்றுப்பட்டைப் பழுது, விளையாட்டு மருத்துவம், இங்கொய்னல் ஹெர்னியா, குடல் அழற்சி, வேரிகோஸ் நரம்புகள், ஹிஸ்டரோஸ்கோபி நடைமுறைகள், முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள், டியூஆர்பி, கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு, மயோமெக்டோமி, லாபரோஸ்கோபிக் மூலம் யோனி கருப்பை நீக்கம் (எல்ஏவிஎச்), கருப்பை சிஸ்டெக்டோமி, லாபராஸ்கோபிக் பெண்ணோயியல் அறுவை சிகிச்சைகள், யோனி மற்றும் அடிவயிற்று ஹிஸ்டரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், தோல்வழி சிறுநீரகக் கல் அகற்றல், டயாலிசிஸ், சிறுநீரக யூரோலாஜிக்கல் அறுவை சிகிச்சை, யூரேட்டர், சிறுநீர்ப்பை கற்கள், புரோஸ்டேட் வீக்கத்துக்கு யூரோலாஜிக்கல் அறுவை சிகிச்சை, வயிற்றுப் பிளாஸ்டி அல்லது டம்மி டக், மார்பகம் பெருக்குதல், ரைனோபிளாஸ்டி, லிப்போசக்‌ஷன், பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை, அம்னைத்துத் தோல் சிகிச்சைகள், நுரையீரலியல், வாதவியல், நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல், ஈஎன்டி, நெப்ராலஜி சிறுநீரகவியல், இரைப்பைக் குடலியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, குழந்தை மற்றும் சிசு சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், இரத்தக்குழல் அறுவை சிகிச்சை, இருதயவியல் மற்றும் நரம்பியல் ஆகியவற்றிற்கான சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டுள்ளது.

ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனையின் மிகவும் அக்கறையுடன் பராமரிப்பு வழங்கும் துணைப் பணியாளர்கள் முதியோருக்கு மிகவும் பாராட்டப்படும்படியான சேவைகளைச் செய்வதனால் மூத்த-குடிமக்கள் நட்பு மருத்துவமனையாகத் திகழ்கிறது.

திறமைக்குப் பரிசு:

ஜெயநகர் மணிப்பால் மருத்துவமனைகள் ஐஎஸ்ஓ 9001 மற்றும் என்ஏபிஎச் அங்கீகாரம் பெற்றது. இந்த மருத்துவமனை என்ஏபிஎச்-இல் இருந்து நர்சிங் கேர் எக்ஸலன்ஸ் சான்றிதழ் பெற்றது.

நோயாளியை நட்புடன் அணுகும் தனது குறிக்கோளுக்கு ஏற்ப, இந்த மருத்துவமனை சிறந்த சேவைகள் மற்றும் தர மேலாண்மை நடைமுறைகள் மூலம் நோயாளியின் மன நிறைவுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது.

ஒவ்வொரு நாளும் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் அதன் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்த, நோயாளிகளிடமிருந்து வரும் பின்னூட்டங்களை மருத்துவமனை பெரிதும் நம்பியுள்ளது!

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்

BEWARE OF SCAM